காவி உடையில் திருவள்ளுவர் – சர்ச்சையை ஏற்படுத்திய கல்வி தொலைக்காட்சி
ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் ஒளிபரப்பில் காவி உடையில் திருவள்ளுவர் உருவம் காட்டப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அரசு பள்ளி மாணவர்கள் பாடங்களை கல்வித் தொலைக்காட்சியின் வாயிலாக ஒளிபரப்பு செய்யும் நிகழ்ச்சி அண்மையில் தொடங்கி வைக்கப்பட்டது.குறிப்பாக ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கல்வித் தொலைக்காட்சியில் ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் பாட ஒளிபரப்பில் காவி உடையில் திருவள்ளுவர் உருவம் காவி உடையில் காட்டப்பட்டதாக கூறப்படுகிறது.இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.