திருவள்ளுவர் படத்தை உடனே அகற்ற வேண்டும் – வைகோ..!
சிபிஎஸ்இ பாடநூலில் வெளியிடப்பட்டுள்ள திருவள்ளுவர் படத்தை உடனே அகற்ற வேண்டும் என வைகோ தெரிவித்துள்ளார்.
சிபிஎஸ்இ எட்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் திருவள்ளுவர் தலையில் முடி இல்லாமல் குடுமி வைத்து காவி உடை அணிந்து கோவில் குருக்கள் போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த புகைப்படம் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மத்திய அரசு உடனடியாக சி.பி.எஸ்.இ. பாட நூலில் வெளியிட்டுள்ள திருவள்ளுவர் படத்தை அகற்றி, தமிழக அரசு ஏற்பு அளித்த திருவள்ளுவரின் திருஉருவப் படத்தை இடம்பெறச் செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றேன் என தெரிவித்துள்ளார்.
திருவள்ளுவருக்கு தமிழகத்தின் பல இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டுள்ள நிலையில், கன்னியாகுமரியில் உள்ள 133 அடி உயரமுள்ள சிலையும், சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டமும் திருவள்ளுவரின் பரைசாற்றும் விதமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.