திருவள்ளூரில் மேலும் 47 பேருக்கு கொரோனா உறுதி, பாதிப்பு எண்ணிக்கை 337ஆக உயர்வு !
திருவள்ளூரில் மேலும் 47 பேருக்கு கொரோனா உறுதி, பாதிப்பு எண்ணிக்கை 337ஆக உயர்வு !
தமிழகத்தில் நேற்று மட்டும் 669 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 7,204 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் 3 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் உயிரிழப்பின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,959 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், திருவள்ளூரில் நேற்று மட்டும் 47 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திருவள்ளூரில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 337ஆக உயர்ந்துள்ளது. இதில் 272 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.