திருவள்ளூரில் மேலும் 15 பேருக்கு கொரோனா பாதிப்பு ! மொத்தம் பாதிப்பு 495ஆக உயர்ந்துள்ளது…..!
திருவள்ளூரில் மேலும் 15 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்த பாதிப்பு 495ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 78 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் நேற்று மேலும் 447 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 9,674 ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
நேற்று கொரோனா தொற்றால் மேலும் 2 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 64 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் 2,240 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தமிழகத்தில் அதிக பாதிக்கப்பட்ட சென்னையில் நேற்று மேலும் 363 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 5, 637ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து, திருவள்ளூரில் நேற்று மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 495ஆக உயர்ந்துள்ளது. திருவள்ளூரில் 80 பேர் குமணமடைந்துள்ள நிலையில் 410 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.