கொரோனா வார்டில் மின் தடை… மூச்சுத்தினறலால் 2 பேர் பலி…

Default Image

திருப்பூர் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் 20 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த வார்டில் உள்ளவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டால், செயற்கை சுவாசம் அளிப்பதற்காக ஆக்சிஜன் வசதியும் செய்யப்பட்டு உள்ளது.

இதற்கிடையே தற்போது திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டுவதற்கான பணிகள் தீவிரமாக நடக்கிறது. இதற்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் பல்வேறு பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளன. இதுபோல் நேற்று கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட வார்டு அருகே கட்டிட பணிக்காக பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டும் பணி நடந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக மின் கம்பி துண்டிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் இருந்த கொரோனா வார்டுகளின் மின்சாரம் தடைபட்டது.
இந்த மின்தடை 40 நிமிட நேரம் நீடித்தது. அப்போது அந்த வார்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த திருப்பூர் முருகானந்தபுரத்தை சேர்ந்த 67 வயது பெண் மற்றும் வெங்கடேசபுரத்தை சேர்ந்த 59 வயது ஆண் ஆகியோர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்திய்உள்ளது.. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்