திருப்போரூர் துப்பாக்கிசூடு வழக்கில் திமுக எம்எல்ஏ இதயவர்மனின் ஜாமீன் மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் திமுக எம்எல்ஏ இதயவர்மன் மற்றும் குமார் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட நிலத்தகராறில் இதயவர்மன் , குமாரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த சம்பவம் குறித்து திருப்போரூர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
இதன் அடைப்படையில், இதயவர்மன் மீது ஐந்து பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர், சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வைத்து, திமுக எம்எல்ஏ இதயவர்மனை தனிப்படை போலீசர் கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட எம்.எல்.ஏ இதயவர்மனனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது .
இதனிடையே துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் கைதான திருப்போரூர் திமுக எம்எல்ஏ ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.இன்று விசாரணைக்கு வந்த நிலையில் இதயவர்மனின் ஜாமீன் மனுவை நாளை விசாரிப்பதாக செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 16) முதல் வரும் நவம்பர் 21 வரையில் 6 நாள்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று முதல்…
திருவாரூர் : வருகின்ற நவம்பர் 30-ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. திருவாரூரில் உள்ள தமிழ்நாடு…
சென்னை : பிரபல லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் தொடர்புடைய பல்வேறு இடங்களில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி முதல் அமலாக்கத்துறையினர் …
சென்னை : நயன்தார விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வரும் நவம்பர் 20-ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
திருநெல்வேலி : நெல்லை மேலப்பாளையத்தில் பிரதான சாலையில், அமரன் திரைப்படம் வெளியாகியுள்ள அலங்கார் திரையரங்கின் மீது, மர்ம நபர்கள் பெட்ரோல்…