திருப்போரூர் துப்பாக்கிசூடு – திமுக எம்எல்ஏ இதயவர்மனின் ஜாமீன் மனு இன்று விசாரணை
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
திருப்போரூர் துப்பாக்கிசூடு வழக்கில் திமுக எம்எல்ஏ இதயவர்மனின் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் திமுக எம்எல்ஏ இதயவர்மன் மற்றும் குமார் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட நிலத்தகராறில் இதயவர்மன் , குமாரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த சம்பவம் குறித்து திருப்போரூர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
இதன் அடைப்படையில், இதயவர்மன் மீது ஐந்து பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர், சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வைத்து, திமுக எம்எல்ஏ இதயவர்மனை தனிப்படை போலீசர் கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட எம்.எல்.ஏ இதயவர்மனனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது .
இதனிடையே துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் கைதான திருப்போரூர் திமுக எம்எல்ஏ ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் இதயவர்மனின் ஜாமீன் மனுவை இன்று விசாரிப்பதாக செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.