கைது செய்யப்பட்ட திருப்போரூர் திமுக எம்எல்ஏ ஜாமீன் மனு கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் திமுக எம்எல்ஏ இதயவர்மன் மற்றும் குமார் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட நிலத்தகராறில் இதயவர்மன் , குமாரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த சம்பவம் குறித்து திருப்போரூர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
இதன் அடைப்படையில், இதயவர்மன் மீது ஐந்து பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர், சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வைத்து, திமுக எம்எல்ஏ இதயவர்மனை தனிப்படை போலீசர் கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட எம்.எல்.ஏ இதயவர்மனனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது .
இந்நிலையில், துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் கைதான திருப்போரூர் திமுக எம்எல்ஏ ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இதயவர்மனின் ஜாமீன் மனுவை செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் விரைவில் விசாரிக்க வாய்ப்புள்ளது.
ஆந்திரா : தமிழகத்தில் இரு மொழிக்கொள்கை என்பது பெரிய அளவில் பேசுபொருளாகியுள்ள நிலையில், தமிழகத்தின் சேர்ந்த அரசியல் தலைவர்கள் பலரும்…
சென்னை : தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை-2025 வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து தற்போது…
டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. போட்டியில் விளையாட வீரர்கள் தயாராகி…
வாஷிங்டன் : நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து Crew-10 மிஷனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளனர்.கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க…
சென்னை : நேற்று (மார்ச் 14) 2025-26 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருந்தார்.…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…