சென்னை: பீலா வெங்கடேசன் அளித்த புகாரில் இன்று காலை கைதான முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து திருப்போரூர் நீதிமன்றம் அவருக்கு நீதிமன்ற பிணை அளித்துள்ளது.
முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது அவரது முன்னாள் மனைவி பீலா வெங்கடேசன் கடந்த 20ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். அதில், ராஜேஷ் தாஸ் கடந்த 18ஆம் தேதி அடியாட்களுடன் தையூரில் உள்ள தனது பண்ணை வீட்டிற்கு வந்து காவலரை தாக்கி, அத்துமீறி நுழைந்து சில பொருட்களை எடுத்து சென்றார் என புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த புகாரின் பெயரில் கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழகுப்பதிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இதனை அடுத்து இன்று கேளம்பாக்கம் காவல் அதிகாரிகள் ராஜேஷ் தாஸை கைது செய்தனர். இன்று கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் சுமார் 4 மணிநேரமாக அவரிடம் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையை அடுத்து அவர் திருப்பேரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
திருப்பேரூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட ராஜேஷ் தாஸுக்கு திடீரெனெ நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக அவர் மருத்துவ சிகிச்சைக்காக வெளியே அழைத்து வரப்பட்டார். பின்னர் நீதிமன்ற பிணையில் ராஜேஷ் தாஸ் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக 2021ஆம் ஆண்டு சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் , பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில் சென்னை விழுப்புரம் நீதிமன்றம் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி இந்த தண்டனையில் இருந்து தற்போது இடைக்கால தடை பெற்றுள்ளார் ராஜேஷ் தாஸ். ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் வழக்கை அடுத்து தான், அவரது மனைவியும் மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான பீலா வெங்கடேசன் விவாகரத்து கோரி பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…