நீதிமன்றத்தில் நெஞ்சுவலி.! காலையில் கைதான முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு ஜாமீன்.! 

Former DGP Rajesh Das

சென்னை: பீலா வெங்கடேசன் அளித்த புகாரில் இன்று காலை கைதான முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து திருப்போரூர் நீதிமன்றம் அவருக்கு நீதிமன்ற பிணை அளித்துள்ளது.

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது அவரது முன்னாள் மனைவி பீலா வெங்கடேசன் கடந்த 20ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். அதில், ராஜேஷ் தாஸ் கடந்த 18ஆம் தேதி அடியாட்களுடன் தையூரில் உள்ள தனது பண்ணை வீட்டிற்கு வந்து காவலரை தாக்கி, அத்துமீறி நுழைந்து சில பொருட்களை எடுத்து சென்றார் என புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த புகாரின் பெயரில் கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழகுப்பதிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இதனை அடுத்து இன்று கேளம்பாக்கம் காவல் அதிகாரிகள் ராஜேஷ் தாஸை கைது செய்தனர். இன்று கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் சுமார் 4 மணிநேரமாக அவரிடம் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையை அடுத்து அவர் திருப்பேரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

திருப்பேரூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட ராஜேஷ் தாஸுக்கு திடீரெனெ நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக அவர் மருத்துவ சிகிச்சைக்காக வெளியே அழைத்து வரப்பட்டார். பின்னர் நீதிமன்ற பிணையில் ராஜேஷ் தாஸ் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக 2021ஆம் ஆண்டு சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் , பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில் சென்னை  விழுப்புரம் நீதிமன்றம் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி இந்த தண்டனையில் இருந்து தற்போது இடைக்கால தடை பெற்றுள்ளார் ராஜேஷ் தாஸ். ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் வழக்கை அடுத்து தான், அவரது மனைவியும் மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான பீலா வெங்கடேசன் விவாகரத்து கோரி பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Saifullah Kasuri
cake inside Pakistan High Commission
PM Narendra Modi’s stern warning
Chhattisgarh Naxal Encounter
Pahalgam terror attack video
Pahalgam Attack news