மகளிடம் அடக்கத்திற்கு பணம் கொடுத்துவிட்டு தனது மகனுடன் தற்கொலை செய்துகொண்ட தந்தை!
திருப்பூர் மாவட்டத்தில் தங்களது இறுதி சடங்கிற்கு செலவுக்கு பணம் கொடுத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பல்லடத்தில் உள்ள சின்னகாளிபாளையம் எனும் கிராமத்தில், தனது மகன் கோபால கிருஷ்ணனுடன் துரைராஜ் வசித்து வந்தார். இவரது மனைவி ஏற்கனவே இறந்துவிட்டார். துரைராஜ் மகள் செல்வியின் மகள் அண்மையில் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் குடும்பமே சோகத்தில் மூழ்கியது.
திடீரென மகள் செல்வியிடம் 30 ஆயிரம் பணம் கொடுத்துவிட்டு செலவுக்கு தேவைப்படும் என கூறிவிட்டு துரைராஜ் சென்றுவிட்டார். பிறகு வீட்டில் துரைராஜும், அவரது மகன் கோபால கிருஷ்ணனும் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டனர். மகள் செல்வி மயக்கம் அடைந்து விழுந்துவிட்டார்.
பிறகு இவர்களை ஊர்மக்கள் மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். இதில் துரைராஜும், கோபால கிருஷ்ணனும் இறந்துவிட்டதாகவும், செல்விக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.