திருப்பரங்குன்றம் வழக்கு:ஏ.கே.போஸ் வெற்றிபெற்றது செல்லாது- உயர்நீதிமன்றம்
- கடந்த முறை நடைபெற்ற திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில், அ.தி.மு.க வேட்பாளர் ஏ.கே. போஸ் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
- ஏ.கே.போஸ் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது செல்லாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வழக்கு:
கடந்த முறை நடைபெற்ற திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில், அ.தி.மு.க வேட்பாளர் ஏ.கே. போஸ் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.இதனை எதிர்த்து திமுக வேட்பாளர் டாக்டர் பி.சரவணன், உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், தேர்தல் நடந்த நேரத்தில் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா, அ.தி.மு.க வேட்பாளராக ஏ.கே.போஸை அங்கீகரித்து வேட்பு மனுவில், இடதுகை பெருவிரல் ரேகையை பதிவுச் செய்து, தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்நிலையில் ஜெயலலிதாவின் கைரேகை போலியானது ,மேலும் போஸ் வெற்றியை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பெங்களூரு சிறையில் ஜெயலலிதா இருந்தபோது பெறப்பட்ட கைரேகையை தாக்கல் செய்ய ஆணையிட்டது.
இதை எதிர்த்து ஏ.கே.போஸ் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்தது.இதனை நீக்க கோரி, திமுகவின் டாக்டர் சரவணன் உச்சநீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.
தேர்தல் அறிவிப்பு:
இந்நிலையில் தேர்தல் ஆணையம் காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.மீதிவுள்ள 3 தொகுதிகளில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இந்த தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதேபோல் திருப்பரங்குன்றம் தொகுதியில் கடந்த முறை போட்டியிட்டு தோல்வியடைந்த திமுக வேட்பாளர் சரவணன் என்பவர், தேர்தல் ஆணையத்திடம் கடிதம் ஒன்றை அளித்தார். அதில் தான் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற தயாராக இருக்கிறேன்.தொகுதி மக்களின் நலன் கருதி இடைத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
ஏ.கே.போஸ் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது செல்லாது:
பின்னர் திருப்பரங்குன்றம் தேர்தல் தொடர்பான பிரதான வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டது.
அதன்படி நேற்று வழங்கப்பட்டது.அதில் ஏ.கே.போஸ் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது செல்லாது.அதேபோல் திமுக வேட்பாளர் சரவணன் தொடர்ந்த தேர்தல் வழக்கு ஏற்கப்படுகிறது.
வேட்பு மனு ஏற்கப்பட்டது தவறு என்ற அடிப்படையில் தான் சரவணன் வழக்கு தொடர்ந்துள்ளார். அதேபோல் இரண்டாம் இடத்தில் வந்தவரை வெற்றி பெற்றவராக அறிவிக்க முடியாது,எனவே அந்த மனு நிராகரிக்கப்படுகிறது என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.