கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மாற்றாக அமைக்கப்பட்ட திருமழிசை மார்க்கெட் இன்று திறப்பு !
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மாற்றாக அமைக்கப்பட்ட திருமழிசை மார்க்கெட் இன்று திறப்பு !
சென்னையில் கோயம்பேடு மார்க்கெட்டில் அதிகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது. இதனால் கடந்த மே 5ம் தேதியுடன் கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டது. இதற்கு மாற்றாக திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் தற்காலிக மார்க்கெட் உருவாக்கியுள்ளனர். இந்த தற்காலிக மார்க்கெட் நாளை முதல் பல விதிகளுடன் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மார்க்கெட்டில் 200 கடைகள் இருக்கிறது. ஒவ்வொரு கடைக்கும் 20அடி இடைவெளி இருகிறது. ஒரு கடைக்கு 2 பேர் என ஒரே நேரத்தில் 400 பேர் மட்டுமே உள்ளே வருவதற்கு அனுமதித்துள்ளனர். இதையடுத்து நேற்று இரவு முதல் காய்கறி லாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. சிறு தொழில் வியாபாரிகள் அதிகாலை 4 மணி முதல் 8 மணி வரை காய்கறிகள் பெற்று செல்ல அனுமதித்துள்ளனர்.