தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1.26 கோடி நிதி ஒதுக்கீடு செய்த திருமாவளவன்
திருமாவளவன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1.26 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தவும் அதனை பரவாமல் தடுக்கவும் மத்திய மாநில அரசுகள் கடுமையான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.அதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்தார்.மேலும் கொரோனா சிகிச்சைக்கான கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.15,000 கோடி ஒதுக்கீடு செய்வதாக பிரதமர் மோடி அறிவித்தார்.
Thol. Thirumavalavan, allocates 1.26 crore from Members of Parliament Local Area Development Scheme (MPLADS) fund for hospitals, PHCs in Chidambaram District towards buying ventilators, masks, testing kits and other medical equipment to fight #CoronaVirus #Covid19 pic.twitter.com/IE9b9KO0h0
— Thol.Thirumavalavan (@thirumaofficial) March 26, 2020
இதனை தொடர்ந்து தமிழக எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதியை ஒதுக்கி வருகின்றனர்.தற்போது அந்த வகையில் சிதம்பரம் தொகுதி எம்.பி.யான திருமாவளவன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1.26 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்துள்ளார்.