விளிம்புநிலை மக்களுக்கு முலாயம் சிங் மறைவு பேரிழப்பு.! விசிக தலைவர் திருமாவளவன் வருத்தம்.!
முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் டிவிட்டரில் இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார்.
மறைந்த உத்திர பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான முலாயம் சிங் இன்று உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர், குடியரசு தலைவர், தமிழக முதல்வர் உட்பட மாநில முதல்வர்கள் பலர் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில்குறிப்பிடுகையில், ‘ சமாஜ்வாடி கட்சியின் தலைவர் திரு.முலாயம் சிங் யாதவ் அவர்களின் மறைவு, தலித்துகள், பழங்குடிகள், இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் முதலிய விளிம்புநிலை மக்களுக்கு நேர்ந்த பேரிழப்பாகும்.’ என குறிப்பிட்டுள்ளார் .
மேலும் பதிவிடுகையில், ‘ முலாயம் சிங் சமூகநீதிக்கான பாதுகாவலர் ஆவார். அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாதது. அவரை இழந்து வாடுகிற அவரது குடும்பத்தினர் மற்றும் சமாஜ்வாடி கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் விசிக சார்பில் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். ‘ என தனது கட்சி சார்பாக மறைந்த முலாயம் சிங் யாதாவிற்கு தந்து இரங்கலை தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவின் பிறந்த ஊரான உத்தரபிரதேசத்தின் சைபாய் எனும் கிராமத்தில் நாளை (11.10.2022) மாலை 3மணிக்கு இறுதி அஞ்சலி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சமாஜ்வாடி கட்சியின் நிறுவனர்- தலைவர் திரு. #முலாயம்சிங்_யாதவ் அவர்களின் மறைவு, தலித்துகள், பழங்குடிகள், இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் முதலிய விளிம்புநிலை மக்கள் யாவருக்கும் நேர்ந்திட்ட பேரிழப்பாகும். அவர் சமூகநீதிக்கான பாதுகாவலர் ஆவார். அவரது இழப்பு..(1/2) pic.twitter.com/66tpmZ8SRY
— Thol. Thirumavalavan (@thirumaofficial) October 10, 2022