பெரியாரின் கனவை நனவாக்க குறியாக இருந்தவர் கலைஞர் – திருமாவளவன்
பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் வேறெந்த மாநிலத் தலைவர்களும் நினைத்துக்கூட பார்க்காத சாதனை என திருமாவளவன் பேச்சு.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் திருமாவளவன் எம்.பி. அவர்கள் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்த நாட்டை காப்பற்ற வேண்டும் என்றால் சனாதன சக்திகள் வெளியே செல்ல வேண்டும்; பாஜகவை வீழ்த்துவதற்கு அனைத்து கட்சிகளும் கைகோர்க்க வேண்டும்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் மட்டுமே அனைவரையும் ஒன்று சேர்க்க முடியும் என தெரிவித்துள்ளார்.
மேலும், பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் வேறெந்த மாநிலத் தலைவர்களும் நினைத்துக்கூட பார்க்காத சாதனை. சாதியற்ற சமூகம் அமைய வேண்டும், அனைத்து சமூகங்களும் ஒன்றாக வாழ வேண்டுமென்று கவலைப்பட்ட ஒரே தலைவர் கலைஞர். மாநில உரிமை பறிபோவதைப்பற்றி இப்போதுதான் எல்லா மாநிலங்களும் கவலைப்படுகின்றன. ஆனால் 1969-ல் ராஜமன்னார் குழுவை அமைத்தார் கலைஞர். மாநில உரிமை கேட்டு முழங்கினார். கலைஞரின் பிறந்தநாளை மாநில சுய ஆட்சி ஜன நாளாக அறிவிக்க வேண்டும்.
முதலமைச்சர் என்கிற நாற்காலியில் அமர்ந்துவிட்ட நிலையிலும் பெரியாரின் கனவை நனவாக்க வேண்டுமென்பதில் குறியாக இருந்தார் கலைஞர். கலைஞரின் என்றென்றும் நினைவுகூரத்தக்க சாதனைகள் சமத்துவபுரம், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என தெரிவித்துள்ளார்.