பாஜக அரசின் இந்த பட்ஜெட்டில் ஆப்பிள் பழத்தின் மீது 35 சதவீதம் கூடுதல் வரியும், கொண்டைக்கடலை மீது 50 சதவீதம் கூடுதல் வரியும், சமையல் எண்ணெய் மீது 20 சதவீதம் கூடுதல் வரியும் விதிக்கப்பட்டுள்ளது.
2021-22 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இதுகுறித்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது மட்டுமின்றி பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களையும், விற்கப் போவதாக நிதி அமைச்சர் இந்த பட்ஜெட்டில் அறிவிப்பு செய்துள்ளார். பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட நாட்டின் வளங்கள் அனைத்தையும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாரை வார்த்துக் கொடுக்கும் மக்கள் விரோத பட்ஜெட் இது.
இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள வேளாண்துறை கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான கூடுதல் வரி ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் சமையல் எண்ணெய், பருப்பு வகை மீது தாங்க முடியாத அளவுக்கு வரிச்சுமையை ஏற்கிறது. நாட்டை விலை பேசி விற்பதாகவும், மக்களின் மீது வரிச்சுமையை கூட்டுவதாகவும் உள்ள இந்த பட்ஜெட்டுக்கு விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டனம் தெரிவிக்கிறோம்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக இரண்டு மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் போராடி கொண்டிருக்கும் நிலையில் யூரியா மீது கூடுதல் வரியை விதித்து மேலும் அவர்களை வாட்டி வதைக்க முடிவு செய்திருக்கிறது இந்த அரசு. அதுமட்டுமின்றி மின் வினியோகத்தை தனியாரிடம் கொடுப்பதென்ற முடிவு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை ஒழித்துக் கட்டுவதற்கான தொடக்கமே ஆகும்.
எல்ஐசியின் பங்குகளை விற்க போவதாக கடந்த பட்ஜெட்டில் அறிவித்தார்கள். இப்போது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அனைத்திலும் 74 சதவீதம் அந்நிய முதலீடு அனுமதிக்கப் போவதாக அறிவித்துள்ளார்கள். எஸ்சி எஸ்டி மாணவர்களுக்கு கூறுகள் திட்டத்தை முற்றாகக் கைவிட்டு விட்ட பாஜக அரசு, அவர்களுக்கான ஒதுக்கீட்டையும் கணிசமாக குறைந்துவிட்டது. ஏசி மாணவர்களுக்கு “போஸ்ட்மெட்ரிக் ஸ்காலர்ஷிப்” திட்டத்தை கைவிட பாஜக அரசு முடிவு செய்த போது அதை எதிர்த்து விடுதலை சிறுத்தை கட்சி மட்டும்தான் போராடியது.
அதன் விளைவாக அடுத்த 5 ஆண்டுகளுக்கு அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக அரசு ஆதரவோடு அறிவித்திருக்கும் தேசிய கொள்கையை நடைமுறைப்படுத்த ஜிடிபியில் 6 சதவீதம் ஒதுக்கபடும் என கூறியிருந்தனர். ஆனால் அதில் பாதி அளவு கூட இந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. உயர்கல்வி முழுவதையும் மத்திய அரசின் கைகளில் எடுத்துக் கொள்வதற்கான அறிவிப்பை இந்த பட்ஜெட்டில் செய்யப்பட்டுள்ளது.
ஒரு மாபெரும் தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நலன்களுக்காகவும் கூட எந்த ஒரு அறிவிப்பும் இல்லை. மாத சம்பளம் பெறுவோர் வருமானவரி வரி சலுகை வழங்கப்படும் என ஆவலுடன் காத்திருந்தனர். அவர்களின் ஆசை நிராசை ஆகிவிட்டது. பாஜக அரசின் இந்த பட்ஜெட்டில் ஆப்பிள் பழத்தின் மீது 35 சதவீதம் கூடுதல் வரியும், கொண்டைக்கடலை மீது 50 சதவீதம் கூடுதல் வரியும், சமையல் எண்ணெய் மீது 20 சதவீதம் கூடுதல் வரியும் விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்தது ஏழை எளிய மக்கள் மீது மேலும் அவதிக்குள்ளாகும் நிலையே ஏற்படும். பட்ஜெட்டில் 3% பற்றாக்குறை மட்டுமே அனுமத்திக்கப்படும். ஆனால் இந்த பட்ஜெட்டில் 9.5 பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதாவது 15 லட்சம் கோடி அளவுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த பற்றாக்குறை சமாளிக்கவே நாட்டின் சொத்துக்களை விற்கும் மக்கள் மீது கூடுதல் வரி விதிக்கவும் இந்த அரசு முடிவு செய்துள்ளது.
இந்த பட்ஜெட்டின் மூலம் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி அதிகமாகுமே தவிர குறையாது. வழக்கம் போல வெகு மக்கள் விரோத பட்ஜெட் தாக்கல் செய்துள்ள பாஜகவின் கார்ப்பரேட் அரசுக்கு எமது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…