இறுதி மூச்சு உள்ளவரை இந்துதுவாத்தை எதிர்த்தவர் அம்பேத்கர்.! திருமாவளவன் பேச்சு.!
தன் கடைசி மூச்சு உள்ளவரை இந்துத்துவாவை எதிர்த்தவர் அம்பேத்கர். அவர்களால் அம்பேத்கரை கொண்டாட முடியாது. என பேசியிருப்பார் விசிக தலைவர் திருமாவளவன்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசினார். அப்போது, அம்பேத்கர் பற்றியும், இந்துத்துவப்பற்றியும் பேசினார்.
அவர் பேசுகையில், ஒரே நேரத்தில் 10 லட்சம் பேரை பௌத்தராக மாற்றிய பெருமை கொண்டவர் அம்பேத்கர் இல்லை. 10 லட்சம் இந்துக்களை பௌத்தர்களாக மாற்றிய பெருமை கொண்டவர் அம்பேத்கர்.
தன் கடைசி மூச்சு இருக்கும் வரையில் இந்துத்துவா கொள்கையை எதிர்த்தவர் அம்பேத்கர். அவர்களால் அம்பேத்காரை கொண்டாட முடியாது. அம்பேத்கர் ஜெயந்தியை கொண்டாட முடியாது. என பேசினார் திருமாவளவன்.