பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ரேஷன் கடைகள் இருக்காது – திருமாவளவன்
Thirumavalavan: மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் ரேஷன் கடைகளே இருக்காது என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் தொல்.திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம் என இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில், சிதம்பரத்தில் விசிக தலைவர் திருமாவளவனும், விழுப்புரம் தொகுதியில் பொதுச் செயலாளர் ரவிக்குமாரரும் போட்டியிடுகின்றனர்.
திருமாவளவன் சிதம்பரம் தொகுதியிலும், பொதுச் செயலாளர் ரவிக்குமார் விழுப்புரம் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். இந்த இரண்டு தொகுதிகளிலும் விசிக பானை சின்னத்தில் போட்டியிடுகிறது. கடந்த சில நாட்களாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் விசிக தலைவர் திருமாவளவன், இன்று சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டார பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது, மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் ரேஷன் கடைகள் இருக்காது. 100 நாள் வேலை திட்டம் இருக்காது, சமூகநீதி இருக்காது, அதிபர் ஆட்சியே வந்துவிடும். ஏழை மக்கள் ரூ.50,000 கடன் வாங்கினால் வீட்டுக்கே வந்து வங்கி நிர்வாகம் வசூலிக்கும். பிரதமர் மோடியின் நண்பர்களான அதானி, மல்லையா வங்கிகளில் பல்லாயிரம் கோடி கடன் வாங்கினால் தள்ளுபடி செய்வார்கள் என்றார்.
மேலும், ஜிஎஸ்டி வரிவிதிப்பு மூலம் ஏழை எளிய மக்களை மத்திய அரசு நசுக்குகிறது. இதில் குறிப்பாக அத்தியாவசிய பொருட்களுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிப்பால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் குற்றச்சாட்டினார். எனவே, மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் முற்றிலும் அழிந்துவிடும். இதன் காரணமாகத்தான் பாஜகவை வீட்டு அனுப்புவதற்கு நமது திமுக தலைவரும், முதல்வருமான முக ஸ்டாலின், இந்தியா கூட்டணியை உருவாக்கி இருக்கிறார் எனவும் கூறினார்.