சிதம்பரம் எனது சொந்த தொகுதி… விட்டுக்கொடுக்க மாட்டேன்… திருமாவளவன் பேட்டி

thol.thirumavalavan

என்னுடைய சொந்த தொகுதியான சிதம்பரத்தில்தான் நான் போட்டியிடுவேன், அதில் எந்த சந்தேகமும் இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டமாக தெரிவித்தார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இந்த பேச்சுவார்த்தையின் போது விசிகாவின் விருப்ப பட்டியல் திமுகவிடம் கொடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

Read More – அரசியல் களத்தில் திடீர் திருப்பம்! அதிமுகவுக்கு தாவும் பாஜகவின் 2 எம்எல்ஏக்கள்!

இந்த நிலையில், மக்களவை தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவதாக திருமாவளவன் கூறியுள்ளார்.  அரியலூரில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய விசிக தலைவர் தொல்.திருமாவளவன், அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு செல்வதும், பாஜகவில் இருந்து அதிமுகவும் செல்வது என கூட்டணியாக இருந்த இரு கட்சிகளிடையே தற்போது நாடக அரசியல் நடைபெற்று வருகிறது. வரும் மக்களவை தேர்தலில் அதிமுகவை பின்னுக்கு தள்ள வேண்டும் அல்லது நீர்த்துப்போக செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் பாஜக திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.

இதனை அதிமுக தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று நான் தொடர்ச்சியாக கூறி வந்தேன். தற்போது அந்த அணியில் இருந்து பிரிந்து வந்து எங்களுக்கும் பாஜகவுக்கும் சம்மதம் இல்லை என்று அதிமுக சொல்வதை பார்க்க முடிகிறது. இருப்பினும், தனியாக அதிமுக பிரிந்து வந்தாலும், பாஜக அவர்களை விடுவதாக இல்லை, அதிமுகவை பலவீனப்படுத்துவதில் மட்டுமே கவனமாக இருந்து வருகிறது என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார்.

Read More – பலதுறை பிரதிநிதிகளுடன்.. திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு ஆலோசனை..!

இதனைத்தொடர்ந்து விசிக தலைவர் திருமாவளவனிடம் சிதம்பரம் தொகுதியில் போட்டியா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது, என்னுடைய சொந்த தொகுதியான சிதம்பரத்தில்தான் நான் போட்டியிடுவேன், அதில் எந்த சந்தேகமும், குழப்பமும் இல்லை. அதனை விட்டுக்கொடுக்க மாட்டேன் என்பது போன்று கூறினார்.

மேலும், மக்களவை தேர்தல் தொடர்பாக எங்கள் விருப்பங்கள் எல்லாம் திமுகவிடம் சொல்லியிருக்கிறோம். எங்கள் கட்சியை பொறுத்தவரை முதற்கட்ட பேச்சுவார்த்தையில் மட்டுமே பங்கெடுத்துள்ளோம். அடுத்தகட்ட பேச்சுவார்த்தை ஓரிரு நாட்களில் நடைபெறும். நான்கு தொகுதிகளை கேட்டிருக்கிறோம்.

Read More – தொடர் இழுபறி… ராஜ்யசபா சீட் கேட்டு உறுதியாக நிற்கும் தேமுதிக? மறுக்கும் அதிமுக…

அதில் ஒரு பொது தொகுதி எங்கள் விருப்பம் எனவும் கூறியுள்ளோம். 8 கட்சிகள் கூட்டணியில் இருப்பதால், அத்தனை தொகுதிகளை பெற முடியாது என்ற நிதர்சனத்தையும் உணர்ந்துள்ளோம் என்றும் தென் மாநிலங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதிகளவில் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். அதன்படி, தமிழகத்தில் திமுக கூட்டணியிலும், வெளி மாநிலங்களில் இந்தியா கூட்டணியிலும் போட்டியிட முயற்சி செய்து வருகிறோம் என்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்