அதிமுகவை விழுங்கும் வேலையை பாஜக செய்து வருகிறது – திருமாவளவன்

thirumavalavan

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், அத்தைக்கு மீசை முளைத்தால், சித்தப்பா என்று அழைப்போம். அதேபோல தான் பாஜகவின் நிலை உள்ளது. பாஜக எந்த காலத்திலும் தமிழகத்தில் ஆட்சி அமைக்காது.

பாஜக ஆட்சிக்கு வராது என்பது அவருக்கே தெரியும். அதனால் தான் வாக்குறுதிகளை அள்ளி இறைக்கிறார். நாங்கள் திமுக கூட்டணியில் இருக்கிறோம். அதை தொடருவோம். இந்தியா கூட்டணியை வலுப்படுத்துவோம்.

அதிமுக தனது இடத்தை தக்க வைத்துக் கொள்வது அவசியமானது. கூட்டணி கட்சியாக இருந்துகொண்டே அதிமுகவை பலவந்தம் படுத்தும் வேலையை பாஜக செய்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியாக பாஜக தான் இருக்கிறது. அதிமுக இல்லை என்பதை காட்டி கொள்வதற்கான எல்லா முயற்சியையும் பாஜக செய்து வருகிறது.

உறுப்பினர்களே இல்லாத ஒரு கட்சி, ஒருநாளைக்கு பலகோடி ரூபாய் செலவு செய்யும் வகையில் நடைபயணம் மேற்கொள்கிறார்கள் என்றால், பணம் எங்கிருந்து வருகிறது. யார் தருகிறார்கள். பணம் எங்கிருந்து வருகிறது என்பதையெல்லாம் எண்ணி பார்க்க வேண்டும்.

எனவே அண்ணாமலை நடக்கும் நடைப்பயணத்தில் தொண்டர்களாக பங்கேற்க கூடியவர்கள், அதிமுக, பாமக கட்சியை சார்ந்த தொண்டர்கள் தான். அவரும் நடந்து செல்வது பாஜக தொண்டர்கள் இல்லை. இதன்மூலம் அதிமுக, பாமகவில் உள்ளவர்களை அவர்களின் கருத்தியலுக்கு ஏற்ப மாற்றி வருகிறார்கள். அதாவது பலவீனப்படுத்தி வருகிறார்கள். இது அதிமுகவுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும்.

திமுகவை எதிர்க்கும் வலிமை கொண்டதாக அதிமுக இருக்கிறது. இன்று அது பெரிய எதிர்க்கட்சியாக இருக்கிறது. அதிமுகவை விழுங்கும் வேலையை பாஜக செய்து வருகிறது. கடந்த காலங்களில் வடஇந்திய மாநிலங்களில் பாஜக கூட்டணி கட்சிகளை விழுங்கி தான், தங்களை வலிமைப்படுத்தியுள்ளர்கள் என விமர்சித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news 2
narendra modi HAPPY
V. C. Chandhirakumar
Parvesh verma - Arvind Kejriwal
Arvind Kejriwal - Atishi
L2E EMPURAAN