கடன்கார அரசு பட்ஜெட் குறித்து திருமாவளவன் விமர்சனம்….!!
தமிழக பட்ஜெட்டில் பட்டியலின மக்கள் மற்றும் பெண்களுக்கான புதிய திட்டங்கள் ஏதும் இல்லை என விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
நேற்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது.தமிழக துணை முதல்வர் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.இந்த பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த பட்ஜெட் ஒரு நிதி பற்றாக்குறை பட்ஜெட் என விமர்சித்தார். மேலும் தேர்தல் அறிவிப்புகளை கொண்டு சில அறிவிப்புகள் வெளியாகியுள்ளதாக விமர்சித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் , தமிழக பட்ஜெட்டில் 44 ஆயிரத்து 176 கோடி பற்றாக்குறை இருப்பதாக நிதியமைச்சர் அறிக்கை தாக்கல் செய்திருக்கிறார்.மேலும் அதில் வருவாய் பற்றாக்குறை 14 ஆயிரத்து 315 கோடி உள்ளதாகவும் , தமிழக அரசின் தற்போது கடன் 3 லட்சத்து 97 ஆயிரத்து 495 கோடியாக உயர்ந்துள்ளதாகவும் இது கடன் கார அரசு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.