இதனை தடுக்க உளவுப்பிரிவு ஒன்றை உருவாக்கிட வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை – திருமாவளவன்
சாதி மற்றும் மதத்தின் பெயரால் நடைபெறும் வன்கொடுமைகளை முன்னெச்சரிக்கையாகத் தடுப்பதற்கு உளவுப்பிரிவு ஒன்றை உருவாக்கிட தமிழக அரசுக்கு திருமாவளவன் வேண்டுகோள்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், சாதி மற்றும் மதத்தின் பெயரால் நடைபெறும் வன்கொடுமைகளை முன்னெச்சரிக்கையாகத் தடுப்பதற்கு ஏதுவாக கண்காணிக்கும் உளவுப்பிரிவு ஒன்றை உருவாக்கிட வேண்டுமென தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.