இப்படித்தான் தேர்தலை நடத்த வேண்டும்.. தேர்தல் ஆணையரிடம் விசிக கோரிக்கை.!

VCK Leader Thirumavalavan

Thirumavalavan – இன்னும் ஒரு மாத காலத்தில் மக்களவை தேர்தல் நாடு முழுவதும் தொடங்க உள்ளது. அதற்கான வேளைகளில்அரசியல் கட்சிகள் தயாராவதை விட வேகமாக, தேர்தலை நடத்தும் தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. அடுத்தடுத்த ஆலோசனை கூட்டங்கள், கட்சியினரிடையே கோரிக்கைகள் என சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது அனைத்து மாநில தேர்தல் ஆணையமும்.

Read More – LKG குழந்தைக்கு பாலியல் தொல்லை… பள்ளி ஆசிரியர்கள் கைது.!

அதே போல பிரதான கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தும் வருகின்றனர். தமிழகத்தில் ஏற்கனவே அதிமுக சார்பில், தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹோவிடம் வாக்காளர் இறுதி பட்டியல் சரிபார்ப்பு உள்ளிட்டவை பற்றி தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

Read More – தொடரும் இழுபறி.. இன்னும் ஓரிரு நாட்களில் இறுதி முடிவு.! தமிழக காங்கிரஸ் திட்டவட்டம்.!

அதே போல, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இன்று தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹோவை சந்தித்து தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தார். இந்த சந்திப்புக்கு பின்னர் அவர்செய்தியாளர்களிடம் தாங்கள் வைத்த கோரிக்கைகள் பற்றி கூறினார்.

Read More – இன்று வடசென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கும் மிக பெரிய ‘மின்’ திட்டம்.!

அதில், மின்னணு வாக்கு எந்திரத்தில் முறைகேடு நடைபெற வாய்ப்புள்ளது. அதனால் , முந்தைய கால தேர்தல் நடைமுறையான ஒப்புகை சீட்டு நடைமுறையை கொண்டு வர வேண்டும் என்றும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்துடன் ஒப்புகை சீட்டையும் கொடுத்து அதனை பெட்டியில் அடைத்து, இறுதி முடிவானது ஒப்புகை சீட்டை எண்ணி அறிவிக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துளோம் என விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்