பாஜகவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு விசிக உறுதுணையாக இருக்கும்.! காங்கிரஸ் தலைவரிடம் திருமாவளவன் உறுதி.!
காங்கிரஸ் புதிய தலைவரான மல்லிகார்ஜுன கார்கேவை டெல்லியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசியுள்ளார்.
இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், ‘இன்றைய அரசியல் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிய பொறுப்பு காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு உள்ளது. அந்தவகையில்
பாஜக, ஆர்.எஸ்.எஸ் -க்கு எதிராக நீங்கள் முன்னெடுக்கும் முயற்சிக்கு விசிக உறுதுணையாக இருக்கும்.’ என தெரிவித்தார்.
மேலும், ‘பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் பொறுப்பு உங்களுக்கு உள்ளது. என கூறினோம். அவரது இத்தனை ஆண்டுகால அனுபவத்தை பயன்படுத்துவார் என எதிர்பார்க்கிறோம்.’ என குறிப்பிட்டார்.
அடுத்ததாக, தமிழக ஆளுநருக்கு எதிராககடிதம் குறித்து கேட்கப்பட்டபோது, ‘ தமிழக எம்பிக்கள் கையெழுத்திட்டு முடித்துவிட்டோம். எங்களது நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு எப்போது அதனை குடியரசு தலைவரை நேரில் சந்தித்து வழங்குவோம் என கூறுகிறாரோ அப்போது அளித்துவிடுவோம். ‘ என திருமாவளவன் கூறியுள்ளார்.