பயங்கரவாதிகளின் கைக்கூலி திருமாவளவன்..!முதல்வர் ஸ்டாலின் மிகவும் நல்லவர் – எச்.ராஜா
தமிழ் மக்களின் விரோத ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது என எச்.ராஜாபேச்சு.
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா முதல்வர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசியுள்ளார். அவர் பேசுகையில், ‘சட்டப்படி தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக பேசுவது குற்றச் செயல்; 11ம் தேதி திருமாவளவன் நடத்தும் மனித சங்கிலிக்கு தமிழக அரசு அனுமதி அளிக்க கூடாது.
பயங்கரவாதிகளின் கைக்கூலி திருமாவளவன். அவர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; விசிக-வை தடை செய்ய வேண்டும். திருமாவளவன்,சீமான் இருவரும் தேச துரோகிகள்.முதல்வர் ஸ்டாலின் மிகவும் நல்லவர்; ஆனால் ஸ்டாலினுடன் இருப்பவர்கள் அவரை கொம்பு சீவி விடுகிறார்கள்.விசிக,நாதக-வை தமிழகத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்.
தமிழ் மக்களின் விரோத ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது; டி.ஜி.பி-க்கு சைக்கிளில் செல்லவே நேரம் சரியாக உள்ளது. சைவம், வைணவம் உள்ளிட்ட எத்தனை உட்பிரிவுகள் இருந்தாலும் அத்தனையும் இந்துதான்; இந்து தேசத்தில் உருவான மதங்கள் அனைத்தும் இந்து மதமே.
ராஜராஜ சோழன் எங்கே மசூதி, சர்ச் கட்டினார் என வெற்றி மாறன் விளக்க வேண்டும்; இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் படி ராஜராஜ சோழன் இந்துதான்.திராவிட மாடல் ஆட்சிக்கு சுயமாக சிந்திக்க தெரியாது என விமர்சித்துள்ளார்.