சாதி சான்றிதழ் சிக்கல்களை ஆராய தனி ஆணையம் வேண்டும்.! திருமாவளவன் அறிக்கை.!

Published by
மணிகண்டன்

சாதி சான்றிதழ் வழங்குவதில் உள்ள சிக்கல்களை தீர்க்க தனி ஆணையம் அமைக்க வேண்டும். இறந்தவரின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அவரது குடும்பத்தாருக்கு 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அறிக்கை மூலம் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்.  

காஞ்சிபுரம் படப்பையைச் சேர்ந்தவ கூலித் தொழிலாளி வேல்முருகன் தனது 10ம் வகுப்பு படிக்கும் மகனின் கல்விக்காக சாதிச் சான்றிதழ் கோரி 5 ஆண்டுகளாக ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்து காத்து இருந்துள்ளர். மலைக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த இவருக்கு சான்றிதழ் வழங்காமால் இருந்துள்ளது.

சான்றிதழ் கிடைக்காத காரணத்தால் வேல்முருகன் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்தார்.  பின்னர் மருத்துவமனை அழைத்துச்செல்லப்பட்ட வேல்முருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வேல்முருகன் உயிரிழப்புக்கு பலரும் தங்கள் இரங்கலையும், கண்டனத்தையும் பதிவு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக அதன் தலைவர் திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சாதி சான்றிதழ் வழங்குவதில் உள்ள சிக்கல்களை ஆராய தனி ஆணையம் ஒன்று அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் குறிப்பிடுகையில், ‘ உயர்நீதிமன்ற வளாகத்தில் வேல்முருகன் தீக்குளித்து பலியான சம்பவம் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரதுகுடும்பத்தாருக்கு கட்சியின் சார்பில் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மலைக்குறவர் எனும் சாதியைக் குறிப்பிட்டு பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்தவரென சாதிச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளார். வருவாய் கோட்டாட்சியரை நேரில் சந்தித்து பலமுறை கோரிக்கை விடுத்துள்ளார். ஆனாலும் சான்றிதழ் தர தாமதமாகி இருக்கிறது. ஆதலால், அவர் உயர் நீதிமன்ற வளாகத்திற்கு தீக்குளித்துள்ளார். காவல்துறையினர், கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிக்கிச்சைக்காக அனுமதித்தனர். எனினும், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலமானார்.

அவர் இறக்கும் நேரத்தில் “ நான் மலைக்குறவன் இனத்தைச் சேர்ந்தவன்; எனது மகனுக்கு சாதிச் சான்றிதழ் கேட்டு அரசு அலுவலகங்களில் பலமுறை அலைந்து பார்த்தேன். ஆனால் சாதிச் சான்றிதழ் கிடைக்கவில்லை. அந்த வருத்தத்தில் இந்த முடிவை எடுத்தேன். எனது இந்த முடிவின் மூலம் இனிமேலாவது எமது மக்களுக்குத் தடைகள் ஏதுன்றி சாதிச் சான்றிதழ் கிடைக்கும் என்று நம்புகிறேன்.’  என மரண வாக்குமூலம் அளித்துள்ளார்.

அவரது மரண வாக்குமூலத்திலிந்து, பழங்குடி மக்கள் சாதி சான்றிதழ் பெறுவது எத்தகைய கடினமானது; சிக்கலானது என்பதை அறிய முடிகிறது. அவரது மகனுக்கும், மகளுக்கும் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. ஆகவே, அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் , குடும்பத்தாருக்கு ரூபாய் ஐம்பது லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விசிக சார்பில் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.’  என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் ஆணையம் ஒன்றை அமைத்து பழங்குடி சான்றிதழ் பெறுவதிலுள்ள சிக்கல்களைக் கண்டறிந்து தீர்வு காண வேண்டுமென்றும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம். என விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்கட்சி தலைவர் திருமாவளவன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Recent Posts

2030-ல் உலக கோப்பை… 30 லட்சம் நாய்களை கொல்ல மொராக்கோ அரசு ‘பகீர்’ திட்டம்! 

2030-ல் உலக கோப்பை… 30 லட்சம் நாய்களை கொல்ல மொராக்கோ அரசு ‘பகீர்’ திட்டம்!

ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…

2 hours ago

மகா கும்பமேளா நடைபெறும் பகுதியில் திடீர் தீ விபத்து!

அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…

3 hours ago

3 மணி நேரம் தாமதம்… இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் அமல்!

காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…

4 hours ago

தொடரும் வடகிழக்கு பருவமழை… தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…

4 hours ago

நாளை பரந்தூர் பயணம்.. தவெக தொண்டர்களுக்கு விஜய் ரகசிய உத்தரவு?

காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…

6 hours ago

“போர் நிறுத்தம் கிடையாது!” ஹமாஸுக்கு பதிலடி கொடுக்கப்படும்.! இஸ்ரேல் திட்டவட்டம்!

டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…

7 hours ago