பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த காவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டதற்கு திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடலூர் புதுநகரில் உள்ள காவல்நிலையத்தில் பணியாற்றும் ரங்கராஜ் ரஞ்சித் அசோக் ஆகிய மூன்று காவலர்கள் கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி பெரியார் சிலைக்கு மரியாதை செய்வதற்காக மாலை அணிவித்து உள்ளனர். இந்நிலையில் இவர்கள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்ததற்காக அவர்கள் மூவரும் கள்ளகுறிச்சி மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இது குறித்து பேசிய விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல் திருமாவளவன் அவர்கள் பெரியார் சிலைக்கும், அண்ணா சிலைக்கு காவியுடை அணிவித்து காவி சாயத்தை ஊற்றி அவமரியாதை செய்பவர்களை கைது செய்து தண்டிப்பதற்கு முன்வராத தமிழக அரசு, பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய 3 காவலர்களையும் பணியிடமாற்றம் செய்து தண்டித்து இருப்பது வேதனை அளிக்கிறது என கூறியுள்ளார்.
மேலும் தமிழகத்தில் தற்போது அதிமுக ஆட்சி நடைபெறுகிறதா? ஆர்எஸ்எஸ் ஆட்சி நடைபெறுகிறதா? என்கிற சந்தேகம் எழுந்து உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். சமூக நீதிக்காக தன் வாழ்நாள் முழுவதும் பாடப்பட்ட பெரியார் சிலைக்கு மாலை அணிவித்ததில் என்ன குற்றம் என்றும், பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள காவலர்கள் மூவருமே இதுவரை எந்த ஒரு புகாருக்கு ஆளாகாதவர்கள் எனவும் அப்படி இருக்கையில் இவ்வாறு பணியிடமாற்றம் செய்வது தண்டிப்பது ஏற்புடையது அல்ல எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் மீண்டும் மூவரையும் கடலூர் புதுநகர் காவல் நிலையத்திலேயே தொடர்ந்து பணியாற்ற ஆணையிட வேண்டும் எனவும் பெரியார், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் வழியில் இயங்க கூடிய ஆட்சி தான் தற்போது தமிழகத்தில் நடந்து வரக்கூடிய அதிமுக ஆட்சி என்பதை உறுதிப்படுத்துவதற்கு இதுதான் சான்றாக இருக்கும் எனவும் விடுதலை சிறுத்தைகள் சார்பில் தமிழக அரசை வலியுறுத்துவதாக திருமாவளவன் அவர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்றயை காலத்தில் AI தொழில்நுட்பம் என்பது பெரிய அளவில் வளர்த்துக்கொண்டு இருக்கும் நிலையில், சினிமாவிலும் அதனை அதிகமாக பயன்படுத்த…
திருநெல்வேலி : திருநெல்வேலி , பாளையம்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் இன்று 8ஆம் வகுப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நேற்று (ஏப்ரல் 14) வரை 5 நாட்கள் தொடர்…
லக்னோ : பொதுவாகவே லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா ஒரு போட்டியில் அணி தோல்வி அடைந்தாள் கூட மிகவும்…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (பிஎஸ்பி) தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி நீக்கப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங்…
டெக்ஸாஸ் : வரலாற்றில் முதல் முறையாக, பெண்கள் மட்டுமே அடங்கிய ஆறு பேர் கொண்ட குழு, புளூ ஒரிஜின் (Blue…