பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த காவலர்கள் பணியிடமாற்றம், திருமாவளவன் கண்டனம்!

Default Image

பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த காவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டதற்கு திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடலூர் புதுநகரில் உள்ள காவல்நிலையத்தில் பணியாற்றும் ரங்கராஜ் ரஞ்சித் அசோக் ஆகிய மூன்று காவலர்கள் கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி பெரியார் சிலைக்கு மரியாதை செய்வதற்காக மாலை அணிவித்து உள்ளனர். இந்நிலையில் இவர்கள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்ததற்காக அவர்கள் மூவரும் கள்ளகுறிச்சி மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இது குறித்து பேசிய விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல் திருமாவளவன் அவர்கள் பெரியார் சிலைக்கும், அண்ணா சிலைக்கு காவியுடை அணிவித்து காவி சாயத்தை ஊற்றி அவமரியாதை செய்பவர்களை கைது செய்து தண்டிப்பதற்கு முன்வராத தமிழக அரசு, பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய 3 காவலர்களையும் பணியிடமாற்றம் செய்து தண்டித்து இருப்பது வேதனை அளிக்கிறது என கூறியுள்ளார்.

மேலும் தமிழகத்தில் தற்போது அதிமுக ஆட்சி நடைபெறுகிறதா? ஆர்எஸ்எஸ் ஆட்சி நடைபெறுகிறதா? என்கிற சந்தேகம் எழுந்து உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.  சமூக நீதிக்காக தன் வாழ்நாள் முழுவதும் பாடப்பட்ட பெரியார் சிலைக்கு மாலை அணிவித்ததில் என்ன குற்றம் என்றும், பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள காவலர்கள் மூவருமே இதுவரை எந்த ஒரு புகாருக்கு ஆளாகாதவர்கள் எனவும் அப்படி இருக்கையில் இவ்வாறு பணியிடமாற்றம் செய்வது தண்டிப்பது ஏற்புடையது அல்ல எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் மீண்டும் மூவரையும் கடலூர் புதுநகர் காவல் நிலையத்திலேயே தொடர்ந்து பணியாற்ற ஆணையிட வேண்டும் எனவும் பெரியார், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் வழியில் இயங்க கூடிய ஆட்சி தான் தற்போது தமிழகத்தில் நடந்து வரக்கூடிய அதிமுக ஆட்சி என்பதை உறுதிப்படுத்துவதற்கு இதுதான் சான்றாக இருக்கும் எனவும் விடுதலை சிறுத்தைகள் சார்பில் தமிழக அரசை வலியுறுத்துவதாக திருமாவளவன் அவர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்