மோடி என்பது ஜாதி பெயர் அல்ல.. அது வேறு.! ராகுல்காந்தி தகுதிநீக்கம்.! திருமாவளவன் கண்டனம்.!
அதானி பிரதமரின் நண்பர் என்பதால் உலக பணக்காரர்கள் பட்டியலில் இருக்கிறார் என விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்து பேசினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெற்றது.
மோடி நண்பர் அதானி :
இந்த போராட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் கலந்து கொண்டனர். அதில் பேசிய திருமானவளன், பிரதமர் மோடியின் நண்பர் என்கிற ஒரே காரணத்தால் தான் அதானி உலக பணக்காரர்கள் பட்டியலில் இருக்கிறார் என்று விமர்சித்தார்.
பாஜக நோக்கம் :
பாஜக தற்போது கருத்தியல் போர் நடத்தி அதன் மூலம் அரசியல் சாசன சட்டத்தை எதிர்த்து வருகிறது. அவர்களை நோக்கமே மாநில அரசுகள், மாநில கட்சிகள் இருக்க கூடாது என்பது தான் என திருமாவளவன் விமர்சித்து இருந்தார்.
மோடி குடும்ப பெயர் :
மேலும், இந்தியாவில் கடன் வாங்கி வெளிநாட்டிற்கு தப்பியோடுத்தியதில் பெரும்பாலானோர் பிரதமர் மோடியின் நண்பர்கள், அதிலும் குஜராத்திகள் தான் வெளிநாட்டிற்கு தப்பியோடியுள்ளனர் எனவும், பிரதமர் மோடியின் நண்பர் அதானி என்பதாலேயே அவர் உலக பணக்காரர்கள் வரிசையில் இருக்கிறார் என்றும் குற்றம் சாட்டினார்.
மேலும் தற்போது ராகுல்காந்தியின் மீது கூறப்படும் குற்றசாட்டு உண்மையல்ல. மோடி என்பது ஜாதி பெயர் அல்ல, அது குடும்ப பெயர் மட்டுமே என பிரதமர் மோடி கூறினார்.