கோவையிலுள்ள பாஜக அலுவலகத்தில் வேலூர் இப்ராஹிம் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தில் மத நல்லிணக்கம் சிறப்பாக உள்ளது. ஆனால், இந்து, முஸ்லிம் நல்லிணக்கத்திற்கு சில இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்கள், திராவிட கட்சிகள் இடையூறு ஏற்படுத்துகின்றன.
மதநல்லிணக்கத்தை நாங்கள் முன்னெடுத்துச் செல்லும் போது அதைக் குலைக்கும் விதமாக விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், இந்து மதத்தை இழிவு படுத்துகிறார். இரு பிள்ளைகளை வளர்ப்பதாக இருந்தால் ஒரு பிள்ளையை கண்டிப்போடு வளர்த்து, இன்னொரு பிள்ளையை கண்டிப்பு இல்லாமல் வளர்க்கும் சூழ்நிலை எந்த ஒரு தகப்பனும் செய்யமாட்டான்.
திருமாவளவன் நேர்மையானவராக இருந்தால் என்ன செய்ய வேண்டும். அவர், இந்து மதத்தில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டுவது போன்று இஸ்லாம் காட்டாத வழியை தீவிரவாதத்தை, வன்முறையை பிஎஃப்ஐ இன்னும் ஒரு சில இஸ்லாமிய அமைப்புகள் செய்கிறார்கள் என்றால் அதை தட்டி கேட்க வேண்டும்.
ஆனால், அவர் இஸ்லாமியர் மக்கள் மத்தியில் பகவத் கீதையையும், இந்துக்களின் வழிபாட்டுத் தலங்களையும் கேவலப்படுத்தி வருகிறார், கொச்சைப்படுத்துகிறார் இதுபோன்ற அருவருக்கத்தக்க செயலை திருமாவளவன் தொடர்ந்து செய்தால் அவரது சேலை கட்டும் போராட்டம் அறிவிப்போம் என வேலுார் இப்ராஹிம் கூறினார்.
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…