ஏழுமலையானை தரிசிக்க முன்பதிவு…. இன்று காலை 10 மணிக்கு தொடக்கம்… தேவஸ்தானம் அறிவிப்பு….

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு முன்பதிவு இன்று தொடங்குகிறது.
திருவேங்கடப்பதி எனப்படும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பரவிவந்த கொரோனா காரணமாக பக்தர்களுக்கான தரிசனம் நிறுத்தப்பட்டது. ஊரடங்கு தளர்வுக்கு பிறகு கடந்த ஜூன் 11ம் தேதி முதல் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்காக ₹300 டிக்கெட் மூலம் தினமும் 13 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்கப்படுகின்றன. அதில், இம்மாதம் 30ம் தேதி வரைக்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே முன்பதிவின் மூலம் விற்கப்பட்டு விட்டன. இந்நிலையில், அக்டோபருக்கான 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் இன்று காலை 11 மணி முதல் https://tirupatibalaji.ap.gov.in/index.html என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்’ என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025