திருக்குறள் ஆன்மிகம் கற்பிக்கிறது, ஆனால் இதை யாரும் பேசுவதில்லை – தமிழக ஆளுநர்

Default Image

திருக்குறளை அரசியலுக்காக ஒரு சிலர் பயன்படுத்துகின்றனர் என திருக்குறள் மாநாட்டில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரை.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் உரையாற்றிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, திருக்குறளை வெறும் வாழ்க்கை நெறிமுறை புத்தகமாகவே காட்ட நினைக்கின்றனர். ஆனால், அது கற்பிக்கும் ஆன்மிகம் பற்றி யாரும் பேசுவதில்லை. ஆன்மிகம், நீதி சாஸ்திரம் குறித்து திருக்குறள் பேசுகிறது. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யூ.போப் வேண்டுமென்றே இதனை மாற்றி மொழிபெயர்த்துள்ளார்.

ஆதிபகவன் என்றால் முதன்மை கடவுள் என நம் அனைவருக்கும் தெரியும், ஆனால், ஜி.யூ.போப் அதை மாற்றி எழுதினார். ஆதி பகவன் என்று திருவள்ளுவர் சொல்லும் வார்த்தையை, இந்தியாவில் உள்ள அனைத்து மொழியினரும் எளிதாக புரிந்து கொள்ள முடியும், அதற்கு அர்த்தம் கடவுள் என்று, திருக்குறள் என்ற புத்தகம் நம்முடைய பாரத நாட்டின் ஆன்மிக பெருமை கொண்ட ஒன்று. ஒரு மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்பதை கூறும் ஒரு புத்தகம். திருக்குறளை அதன் வடிவம் மாறாமல் மொழி பெயர்க்க வேண்டும். திருக்குறள் இந்தியாவின் அடையாளம். திருக்குறளை அரசியலுக்காக ஒரு சிலர் பயன்படுத்துகின்றனர்.

திருவள்ளுவரால் தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமிதம், திருவள்ளுவரின் புத்தகங்களை படிக்கும்போது புத்துணர்ச்சி ஏற்படுகின்றது என தெரிவித்தார். இதனிடையே பேசிய தமிழக ஆளுநர் ஆர்என் ரவி, கிறித்து பிறப்பதற்கு 3100 ஆண்டுகளுக்கு முன்பே, கோள்களின் நிலையை கண்டறிந்து, பஞ்சாங்கத்தை உருவாக்கி, சூரிய சந்திர கிரகணங்கள் எப்போது ஏற்படும் என்பதை மிகச்சரியாக இந்தியர்கள் கணித்திருந்தனர் எனவும் குறிப்பிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்