திருக்குறள் நெறியை அடக்க நினைத்தால் தமிழக மக்கள் கொதித்தெழுவார்கள் – வைகோ
திருக்குறள் நெறியை அடக்க நினைத்தால் தமிழக மக்கள் கொதித்தெழுவார்கள் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார் .
பிரதமர் நரேந்திர மோடி தாய்லாந்தில் அந்நாட்டு மொழியில் திருக்குறளை வெளியிட்டார் .இதனால் தமிழக பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில்,திருவள்ளுவர் படத்தை காவி உடை, நெற்றியில் விபூதியுடன் பதிவிடப்பட்டது.இந்த பதிவிற்கு பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில், திருக்குறள் நெறியை இந்துத்துவ ‘சிமிழுக்குள்’ அடக்க நினைக்கும் பாஜக, இதுபோன்ற பண்பாடற்ற செயல்பாடுகளை நிறுத்த வேண்டும் .நிறுத்தாவிடில், தமிழக மக்கள் மென்மேலும் கோபாவேசமாய் கொதித்து எழுந்து தக்க பதிலடி கொடுப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.