மதுரை சித்திரை திருவிழா : இன்று திருக்கல்யாணம் வைபோகம்.!
இன்று மதுரை மீனாட்சி கோவிலில் திருக்கல்யாண வைபோகம் நடைபெற உள்ளது .
மதுரை மீனாட்சி கோவிலில் சித்திரை திருவிழாவானது கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி துவங்கி நாள் ஒர வைபோகம் என கோலாகலமாக திருவிழா நடைபெற்று வருகிறது. இதில், இன்று மீனாட்சி மற்றும் – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபோகம் நடைபெற உள்ளது.
மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபோகமானது, இன்று காலை 8.35 மணி முதல் 8.59 மணிக்குள் நடைபெற உள்ளது. இந்த திருக்கல்யாணத்தை காண தமிழகம் முழுவதில் இருந்து பக்தர்கள் குவிந்துள்ளனர். இதனால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் , போக்குவரத்து ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
நாளை திருக்கல்யாண கோலத்தில் மீனாட்சி – சுந்தரேஸ்வரர் வீதிஉலா வருவார்கள். அதற்கு அடுத்த நாள் மே 5ஆம் தேதி அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு நடைபெற உள்ளது .