திருச்செந்தூர் கோயில் சிறப்பு கட்டண தரிசனம் ரத்து..!

Default Image

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றாக திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்கு பொதுமக்கள் பொது தரிசனம் செய்ய 20 ரூபாய், 100 ரூபாய், 250 ரூபாய் என கட்டணங்கள் சாமி தரிசனத்திற்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.   இதற்கிடையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் கட்டண முறையில் மாற்றத்தை செய்து கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், திருக்கோயில் இணை ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் பக்தர்களின் நலன் கருதி இனி ரூ.20 மற்றும் ரூ.250 தரிசன கட்டணச் சீட்டு இன்று முதல் ரத்து செய்யப்படுவதாகவும் இன்று முதல் ரூ.100 கட்டண வரிசை மற்றும் பொது தரிசன வரிசையில் மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்