#Breaking : திருச்செந்தூர் கோவிலுக்குள் செல்போன் உபாயகப்படுத்த தடை.! உயர்நீதிமன்றம் உத்தரவு.!
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலுக்குள் அர்ச்சகர்கள் உட்பட யாரும் செல்போன் உபயோகப்படுத்த கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் அனைவரும் செல்போன் உபயோகபடுத்துகிறாரகள். சாமி சிலை முன்பு செல்பி எடுத்து கொள்கிறார்கள். அபிசேகம் செய்வதை வீடியோ எடுத்து யூ-டியூப் சேனல்களில் பதிவிடுகிறார்கள். நாகரீகமாக உடை அணிவதில்லை என மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள், மகாதேவன், சத்ய நாராயண பிரசாத் முன்பு விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிபதிகள், ‘ திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குள் அர்ச்சகர்கள் உட்பட யாரும் செல்போன் உபயோகிக்க கூடாது.’ என தடை விதித்து தீர்ப்பளித்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவில் வாசலில் கூட யாரேனும் செல்போன் உபயோகிக்க முடியுமா? ஆனால் தமிழகத்தில் எந்த கோவிலுக்குள்ளும் சாமியுடன் செல்பி எடுக்கும் நிலை தான் இருக்கிறது எனவும் நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
மேலும், கோவில் வளாகத்தில் நாகரீகமாக உடை அணிந்து தான் வர வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். இது குறித்த சுற்றறிக்கையை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு இந்து அறநிலையத்துறை அனுப்பிவைக்க வேண்டும் எனவும்,
கோவிலுக்குள் நுழையும் போது செல்போன் சோதனை செய்ய வேண்டும். அதனையும் மீறி கோவிலுக்குள் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டால், அதனை திருப்பி கொடுக்க கூடாது எனவும் தீர்ப்பளித்துள்ளனர். இது குறித்த அறிக்கையினை இந்து அறநிலையத்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய் வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.