நாகை, கடலூர் உள்ளிட்ட 5 துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் …!
நாகை, கடலூர் மற்றும் எண்ணூர் உள்ளிட்ட 5 துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதையடுத்து பல்வேறு மாவட்டங்களிலும் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே நாளை காலை கரையை கடக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதனை அடுத்து நாகப்பட்டினம், எண்ணூர், கடலூர், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் துறைமுகத்தில் இருக்கும் படகுகள் மற்றும் கப்பல்களை பாதுகாப்பாக நிறுத்தி வைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பாம்பன் மற்றும் தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களிலும் ஒன்றாம் எண் புயல் கூண்டு எச்சரிக்கை ஏற்பட்டுள்ளது.