மறைக்க நினைப்பது மக்களுக்குச் செய்யும் மாபெரும் துரோகம் – முக ஸ்டாலின் ஆவேசம்.!

Default Image

மார்ச் தொடங்கி மே வரை கொரோனா கட்டுக்குள் இருக்கிறது என்று காலம் கடத்திய அரசு இனியும் மறைப்பது ஆபத்து – முக ஸ்டாலின் அறிக்கை.

தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இல்லை என்றும் கட்டுக்குள் அடங்காமல் தான் இருக்கிறது என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மார்ச் தொடங்கி மே வரை கொரோனா கட்டுக்குள் இருக்கிறது என்று காலம் கடத்திய அரசு இனியும் மறைப்பது ஆபத்து என்றும் எதையும் மறைக்க நினைப்பதே மக்களுக்கு செய்யும் மாபெரும் துரோகம் என்று கூறியுள்ளார்.

மேலும், வரலாற்றில் மாபெரும் கடும் பழிக்கு இறையாகிவிடாதீர்கள் என முக ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துள்ளார். எந்த அறிவிப்பாக இருந்தாலும் அதனை அரசுகள் முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளவர்களை தனிமைப்படுத்தி வைக்க அரசு தயங்குவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த சென்னைக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.  பரிசோதனை செய்தால் எண்ணிக்கை கூடும் என்பதற்காக அதை தவிர்க்கிறது அரசு என்று குறிப்பிட்டுள்ளார். நோயை மறைப்பது என்பது தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளும் ஆபத்து என்பதை முதல்வர் உணர வேண்டும். கொரோனா மேலும் பரவாமல் இருப்பதற்கு தமிழக அரசு ஆக்கபூர்வமான செயல்களை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்