இருசக்கர வாகனங்களை திருடி ,அதை விற்று உல்லாசமாக இருந்த கள்ளக்காதலர்கள்!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
திருப்பூரில் உள்ள தெற்கு பகுதியில் அடிக்கடி இரு சக்கர வாகனங்கள் திருட்டு போவதாக வந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் இன்ஸ்பெக்ட்டர் அண்ணாதுரை தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஜூலை 3-ம் தேதி இரவு ஒரு பெண்ணும் ஆணும் வெவ்வேறு இருசக்கர வாகனங்களில் வந்துள்ளனர்.சந்தேகம் அடைந்த காவல் துறையினர்,அவர்களை அழைத்து விசாரித்துள்ளனர்.
அப்போது அவர்கள் தாங்கள் கணவன்-மனைவி என்றும் அங்குள்ள ஒரு பனியன் கம்பேனியில் வேலைபார்த்து வருவதாகவும் கூறியுள்ளனர்.மேலும் காவல் துறையினர் கேட்ட கேள்விக்கு திக்கி தடுமாறியவாறு பதில் அளித்துள்ளனர்.
மேலும் சந்தேகத்தின் அடிப்படையில் இருவரையும் தனித்தனியாக அழைத்து விசாரித்துள்ளனர்.அப்போது இருவரும் PKR காலனியை சேர்ந்த லோகநாதன், கல்லாங்காட்டை சேர்ந்த சுதா என்று தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இருவரும் ஒரே வீட்டில் தங்கி இருக்கும் கள்ளக்காதல் ஜோடி என்றும் காலையில் வேலைக்கு சென்றுவிட்டு இரவில் இருசக்கர வாகனங்களை திருடி வந்தது தெரிய வந்துள்ளது.மேலும் பெண்ணுடன் வருவதால் காவல்துறையினருக்கு சந்தேகம் வராது என்று எண்ணியதாகவும் கூறியுள்ளனர்.
இவர்கள் தங்கள் இல்லற வாழ்க்கைக்காக இரு சக்கர வாகனங்களை திருடி விற்று அதில் வரும் பணத்தை வைத்து உல்லாசமாக இருந்துள்ளனர்.மேலும் அவர்கள் விற்ற மற்றும் பதுக்கி வைத்திருந்த இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்து இரு கள்ளக்காதலர்களையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பும்ரா வெளியே., வருண் உள்ளே! ஜெய்ஸ்வாலுக்கு ‘ஷாக்’! சாம்பியன்ஸ் டிராபி ‘புது’ அப்டேட் இதோ…
February 12, 2025![Jasprit Bumrah - Varun chakaravarthy - Yashasvi jaiswal](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Jasprit-Bumrah-Varun-chakaravarthy-Yashasvi-jaiswal.webp)
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)