வயதானவரிடம் உதவுவது போல் நடித்து பாசத்தை காட்டி பணம் பறிக்கும் பலே திருடன்.!

Default Image
  • சென்னையில் தனியாக செல்லும் முதியவர்களிடம் தெரிந்த நபர் போல் பேசி உதவுவதாக சொல்லி போக வேண்டிய இடத்துக்கு அழைத்து சென்று பணம் பறிக்கும் திருடன்.
  • இது குறித்து டி.பி.சத்திரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் விசாரணை நடத்தி வரும் போலீசார், சிசிடிவி காட்சிகளில் மூலம் அந்த நபரை தேடி வருகின்றனர்.

சென்னை கீழ்ப்பாக்கம் கார்டன் பகுதியைச் சேர்ந்த சதாசிவம் 93 வயதான முதியவர். இவர் மீன்வளத் துறையில் அதிகாரியாக பணியாற்றி கடந்த 1980-ம் ஆண்டு தான் ஓய்வு பெற்றார். அவரது வீட்டிற்கு அருகிலுள்ள இந்தியன் வங்கிக்கு தனது பென்ஷன் பணத்தை எடுப்பதற்காக சென்றிருந்தார். அப்போது தலைகவசத்தை அணிந்து கொண்டு எதிரில் வந்த ஒருவர், சதாசிவத்தை ஏற்கனவே தெரிந்தவர் போல் நலம் விசாரித்தார். பின்பு எங்கு செல்ல வேண்டும் என்று கேட்ட அந்த நபர், அருகில் உள்ள வங்கிக்கு செல்வதாக கூறினார் சதாசிவம்.

இந்நிலையில், வங்கிக்கு சென்று ரூ.20 ஆயிரம் எடுத்து கொண்டு திரும்பிய போது, பின் தொடர்ந்து கவனித்த அந்த நபர், திரும்பவும் அந்த முதியவரை சந்தித்தார். தனக்கு வந்த வேலை முடிந்துவிட்டது, வீட்டு வழியாக தான் செல்கிறேன், வண்டியில் ஏறுங்கள் தாத்தா என கூப்பிட்டார். இதை நம்பி, தனது குடும்பத்தினருக்கு தெரிந்த நபராக இருக்கும் என நினைத்து அவருடன் சதாசிவம் சென்றார். வீட்டிற்கு அருகில் இறக்கிவிட்டு அந்த நபர் சென்ற பிறகு கைப்பையை பார்த்த போது தான் ரூ.20 ஆயிரம் அந்த நபர் திருடிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து டி.பி.சத்திரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் விசாரணை நடத்தி வரும் போலீசார், சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ள அந்த நபரின் அடையாளங்களை வைத்து தேடி வருகின்றனர். போலீஸ் கூறுகையில், சென்னையில் பல்வேறு இடங்களில் முதியவர்களை அணுகி பாசமாக பேசி உதவுவது போல் சிலர் பணம் திருடி வருகிறார்கள், தெரியாத நபர் யாரும் தானாக முன்வந்து உதவி செய்வதாக கூறினால் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

அதே வேளையில் நகை, பணத்துடன் வெளியில் செல்லும் முதியவர்களுடன் குடும்பத்தினர் யாராவது உடன் சென்றால் இது போன்ற மோசடி வழிகளை தவிர்க்கலாம் என்றும் காவல் துறையினர் கூறியுள்ளனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்