திமுகவின் நாடகத்தை நம்ப மாட்டார்கள் – செல்லூர் ராஜு பேட்டி
நீட் தேர்வு விவகாரத்தில் திமுக மக்களிடத்தில் நம்பிக்கையை பெற முடியாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், அதிமுக மாநாடு நடைபெறும் நாளில், திமுக நீட் தேர்வுக்காக போராட்டம் நடத்துவதாக அறிவித்தது தரக்குறைவான செயல். நீட் தேர்வு ரத்து செய்ய தமிழ்நாட்டில் போராட்டம் நடத்தி எந்த பயனுமில்லை.
மக்கள் மிக தெளிவாக இருக்கிறார்கள், திமுகவின் நாடகத்தை நம்ப மாட்டார்கள். திமுகவால் தான் நீட் தேர்வு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. நீட் தேர்வை ரத்து செய்ய குடியரசு தலைவர், பிரதமர் வீடு முன்பாக தான் திமுக போராட்டம் நடத்த வேண்டும். அதைவிட்டு, மாபெரும் கின்னஸ் சாதனை படைக்கவுள்ள அதிமுகவின் மாநாடு நடைபெறும் அதே நாளில் நீட் தேர்வை மையமாக வைத்து திமுக போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுகவின் செயல் முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சி நோக்கம் கொண்டது என தெரிவித்துள்ளார்.