என்னைப்பற்றி மீம்ஸ் போடுவார்கள்…! அதைப்பற்றி நான் கவலைப்படமாட்டேன்…! – அமைச்சர் செல்லூர் ராஜு

என்னைப்பற்றி பல மீம்ஸ்கள் எல்லாம் போடுவார்கள். அதைப்பற்றி நான் கவலைப்படவே மாட்டேன்.
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பளராக அறிவிக்கப்பட்டுள்ள செல்லூர் ராஜூ, ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் தேர்தல் அலுவலகத்தை இன்று திறந்து வைத்தார். அங்கு தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சியை பிடிக்க, ஆண்டுக்கு 6 சிலிண்டர் இலவசம் திட்டமும், குடும்பத்தலைவிகளுக்கு 1,500 திட்டமும் போதும். இதை தவிர்த்து, கூட்டுறவு வங்கி நகை கடன், மகளீர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடியையும் முதல்வர் அறிவித்துள்ளார்.
நான் இப்படி பேசுவதால், என்னைப்பற்றி பல மீம்ஸ்கள் எல்லாம் போடுவார்கள். அதைப்பற்றி நான் கவலைப்படவே மாட்டேன். மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி என தெவித்துள்ளார்.