தன் தாயை பற்றி எவ்வளவு தரக்குறைவாக பேசுகிறார்கள் என திமுக எம்பி ஆ.ராசா மீது முதல்வர் குற்றசாட்டியுள்ளார்.
தமிழகத்தில் அனல்பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள முதல்வர் பழனிசாமி திருவொற்றியூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் குப்பனுக்கு ஆதரவாக இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய முதல்வர், வெற்றி நடைபோடும் தமிழகம் என்றால், ஸ்டாலினுக்கு பயம், ஏனென்றால் அவர் எதுவும் செய்யவில்லை என விமர்சித்தார்.
ஏரளனமான திட்டங்களை செயல்படுத்தி உள்ளதால் தான் வெற்றிநடைபோடும் தமிழகம் என்கிறோம். ஸ்டாலினின் மூலதனமே பொய்தான். எங்கு சென்றாலும் அவர் பொய்தான் சொல்கிறார். தமிழகத்தில் ரவுடி ராஜ்ஜியம் இல்லை, அதிமுக ஆட்சியில் சட்ட – ஒழுங்கு பேணி பாதுகாக்கப்படுகிறது.
திமுக ஆட்சியில் மின்வெட்டு இருந்தது. சென்னை போன்ற மாநகரில் மின்சாரம் இல்லாமல் இருக்க முடியுமா? என கேள்வி எழுப்பியுள்ளார். இதனை தொடர்ந்து பேசிய முதல்வர், என் தாயை பற்றி எவ்வளவு தரக்குறைவாக பேசுகிறார்கள் என திமுக எம்பி ஆ.ராசா மீது முதல்வர் குற்றசாட்டியுள்ளார்.
என் தாயை இழிவுபடுத்தி பேசுகிறார்கள். நாளை திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்கள் நிலை என்ன ஆகும்? என கேள்வி எழுப்பி, ஒரு சாதாரண குடும்பத்தில் உங்களை போல் வளர்ந்தவன் நான். ஒரு சாமானியன் முதல்வராக வந்தால் எவ்வளவு பேச்சுக்களை வாங்க வேண்டுயிருக்கிறது என்று தன் தாயை பற்றி குறிப்பிடும்போது உணர்ச்சிவசப்பட்டு தழுதழுத்த குரலில் முதல்வர் பேசியுள்ளார்.
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…