காட்டுமிராண்டித் தனமாக பேசுகிறார்கள்., அதிமுகவை மீட்டெடுப்போம் என்று சொன்னது தப்பா? – டிடிவி தினகரன்
அதிமுகவை மீட்டெடுப்பது என்றைக்கு நடக்கும் என தெரியாது, ஆனால் மீட்டெடுப்போம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை தி.நகர் வீட்டில் சசிகலாவை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அதிமுகவை மீட்டெடுப்பது என்றைக்கு நடக்கும் என தெரியாது, ஆனால் மீட்டெடுப்போம். அதிமுகவை மீட்டெடுக்கத்தான் அமுமுகவை தொடங்கினோம். பேசுபவர்கள் பேசட்டும் காலம் அவர்களுக்கு பதில் சொல்லும் என கூறியுள்ளார்.
அமைச்சர் பதிவில் இருப்பவர்கள், ஒரு முதலமைச்சராக இருப்பவர் எப்படி பேச வேண்டும் என்கின்ற ஒரு வரைமுறை கூட இல்லாமல், சாலையில் நின்று எப்படி எல்லாம் தரமற்ற முறையில், காட்டுமிராண்டித் தனமாக பேசுகிறார்கள் என்பதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
ஒருவாரகாலமாக ஏன் சிலர் பதற்றத்தில் இருக்கின்றார்கள்? என்ன காரணம்? என்ற கேள்வியை எழுப்பிய தினகரன், நாங்களாக வந்தோம், நாங்களாக இருக்கிறோம். நான் ஏதாவது ஒரு வார்த்தை கண்ணியக் குறைவாக பேசி இருக்கேனா? என்றும் கட்சி ஆரம்பித்தது அதிமுகவை மீட்டெடுக்க என்று சொன்னது தப்பா? எனவும் டிடிவி தினகரன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.