போஸ்டரில் அர்ஜுனமூர்த்தி, தமிழருவி மணியன் புகைப்படங்கள் இருக்கக்கூடாது என்று நிர்வாகிகளுக்கு ரஜினி மக்கள் மன்றம் உத்தரவு.
நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதம் கட்சி துவங்கவுள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு டிசம்பர் 31-ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார். புதிதாக தொடங்கவுள்ள கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தி என்பரையும், கட்சியின் மேற்பார்வையாளராக காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியனையும் நியமனம் செய்யப்பட்டது.
இந்நிலையில், கட்சி தொடர்பான பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ஒட்டப்படும் போஸ்டர்களில் அர்ஜுன மூர்த்தி, தமிழருவி மணியன், மாநில நிர்வாகி சுதாகர் ஆகியோரின் புகைப்படங்கள் இடம் பெறக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ரஜினி புகைப்படத்துடன் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகளின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க உள்ள நிலையில் பெங்களூரில் உள்ள தனது அண்ணன் சத்யநாராயணாவை சந்தித்து ஆசி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…