இவர்கள் பதிவுத்துறை அலுவலகத்திற்கு நுழையக் கூடாது.. லஞ்சம் கேட்டால் புகார் தரலாம் – அமைச்சர் மூர்த்தி
ஆவண எழுத்தர்கள், இடைத்தரகர்கள் பதிவுத்துறை அலுவலகத்திற்கு நுழையக் கூடாது என அமைச்சர் மூர்த்தி பேட்டி.
மதுரையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி, தமிழ்நாட்டில் உள்ள பதிவுத்துறை அலுவலகங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை இணைய வழியில் செலுத்தலாம். பதிவுத்துறையை மேம்படுத்த ஸ்டார் 3.0 எனும் பதிவுத்துறை செயலி விரைவில் கொண்டு வரப்படும்.
ஆவண எழுத்தர்கள், இடைத்தரகர்கள் பதிவுத்துறை அலுவலகத்திற்கு நுழையக் கூடாது. பத்திரப்பதிவுக்கு லஞ்சம் கேட்டால் பதிவுத்துறை தலைவருக்கு புகார் தரலாம். பத்திரப்பதிவுக்கு வருவோர் பணம் கொண்டு வர தேவையில்லை, ஏடிஎம் கார்டு மூலம் பதிவு கட்டணம் செலுத்தலாம் என தெரிவித்தார்.