இவர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் – விஜயகாந்த்
மாநகராட்சி பெண் பணியாளர்களுக்கு மகப்பேறு காலங்களில் குறைந்தது 6 மாத சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும் என விஜயகாந்த் வலியுறுத்தல்.
தமிழக அரசு அனைத்து மாநகராட்சிகளிலும் பணிபுரியும் தற்காலிக மற்றும் தினக்கூலி பணியாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ நகராட்சி நிர்வாகத்துறை பிறப்பித்துள்ள அரசாணை எண் 152-ஐ ரத்து செய்திட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சி பெண் பணியாளர்களுக்கு மகப்பேறு காலங்களில் குறைந்தது 6 மாத சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும்.
அனைத்து மாநகராட்சிகளிலும் பணிபுரியும் தற்காலிக மற்றும் தினக்கூலி பணியாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.