இவர்கள் அனைவரும் 10 நாட்களுக்கு ஒருமுறை டெஸ்ட் செய்ய வேண்டும்- சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்
நிவாரணம் வழங்கும் தன்னார்வலர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்புப்பணி சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், சென்னை வி.ஆர்.பிள்ளை தெருவில் ஒரு தன்னார்வலர் மூலம் 52 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.நிவாரணம் வழங்கும் தன்னார்வலர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும். கோயம்பேடு சந்தை தொழிலாளர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
தன்னார்வலர்கள் அனைவரும் தாமாக முன்வந்து 10 நாட்களுக்கு ஒருமுறை டெஸ்ட் எடுத்துக்கொள்ள வேண்டும் .நமக்கு கொரோனா வராது என அலட்சியத்துடன் யாரும் இருக்கக்கூடாது.கொரோனாவை ஒழிக்க மக்களின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம். மூச்சுத்திணறல், காய்ச்சல், சளி, இருமல் இருப்பவர்கள் தாமாக பரிசோதனைக்கு முன்வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.