படம் பார்ப்பவர்களுக்கு பிரியாணி போடுகிறார்கள் – சீமான் விமர்சனம்

Default Image

டிக்கெட்களை வாங்கி இலவசமாகக் கொடுக்கிறார்கள் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம்.

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி திரையரங்குகளின் வெளியாகி வெற்றிகரமாக ஓடிகொண்டியிருக்கிறது. காமெடி படங்களை ஒதுக்கிவிட்டு கருத்துள்ள படங்களில் நடிக்கும் முடிவில் களமிறங்கி உள்ள உதயநிதி ஸ்டாலின், பாலிவுட்டில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஆர்ட்டிக்கள் 15’ என்ற திரைப்படம் ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

போனி கபூர் தயாரிப்பில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரிவியூ தியேட்டரில் சில தினங்களுக்கு முன்னர் பார்த்த  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் அருண்ராஜா காமராஜ், தயாரிப்பாளர்கள் போனி கபூர் உள்ளிட்ட படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

கடந்த மே-20ம் தேதி வெளியான உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படத்திற்கு, தியேட்டர்களில் பிரம்மாண்ட கட் அவுட்கள் வைப்பது, ஒரு ஷோ முழுவதையும் ஒரே ஆளாக புக் செய்வது, தியேட்டருக்கு வருபவர்களுக்கு இனிப்புகளை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு விதமாக திமுகவினர் அலப்பறையுடன் கொண்டாடி வருகின்றனர். இதற்கு சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர். அந்தவகையில் தற்போது, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்து பதிவிட்டுள்ளார்.

அதில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற, மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தம்பி உதயநிதி நடித்த படத்தை முதல் காட்சி பார்த்துவிட்டுப் படம் எடுத்துப் பகிர்ந்து படத்தைப் பாராட்டி பதிவிடுகிறார்கள். டிக்கெட்களை வாங்கி இலவசமாகக் கொடுக்கிறார்கள். படம் பார்ப்பவர்களுக்கு பிரியாணி போடுகிறார்கள். சிறப்பான மக்கள் பணி! வாழ்க திராவிட மாடல்! என்றும் விமர்சித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்